May 23, 2025 7:18:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவிலிருந்து இலங்கை வருவதற்கு தற்காலிக தடை

photo:www.airport.lk

தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்ற நபர்கள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கப்டன் தேமிய அபேவிக்கிரம இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.