October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு; இருவர் மரணம்!

இலங்கையில் நிலவும் சீரற்ற கால நிலையால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஒன்றரை இலட்சம் பேர் வரையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று (04) காலை ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவரை தேடி மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட அகழ்வாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.