photo:www.health.com
இலங்கையில் தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள இரத்த தானம் அவசியம் என்பதால் இரத்த தானம் செய்ய முன்வருமாறு தேசிய இரத்த மாற்ற சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் தேசிய இரத்த மாற்ற சேவை கடும் நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர் இரத்த தானம் செய்பவர்கள் இரத்த வங்கிகளுக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி, இரத்த தானம் செய்பவர்கள் 0115332153 மற்றும் 0112369931 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து அல்லது www.nbts.health என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமது தகவல்களை வழங்கும்படி வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.