January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’;ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிப்பு

மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

“பயணக் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் பயண கட்டுப்பாடுகளின் போது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் தோல்வியுற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுவரை அதிகமான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் தோல்வி நிரூபிக்கப்பட்டுள்ளதால் மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்வது மிகவும் உகந்தது என அவர் கூறியுள்ளார்.

பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகள் போன்ற அனைத்து துறைகளிலும் அரசாங்கம் தனது இயலாமையை  காட்டியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

அதனால்தான் தேல்வி அடைந்துள்ள அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாகவும் ரஞ்சித் மத்தும குறிப்பிட்டுள்ளார்.