எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கப்பல் நிறுவனம் நஷ்டஈடு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கடல்சார் வர்த்தக செயலகத்தின் பணிப்பாளர் அஜித் செனவிரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
கப்பல் விபத்தால் இலங்கையின் கடற்பரப்பு மற்றும் கடற்கரைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த நிறுவனம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தால் இலங்கைக்கான பாதிப்புகளை ஆராய்ந்து, சட்டமா அதிபர் ஊடாக கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க கடல்சார் வர்த்தக செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கப்பலின் தகவல் தொடர்பாடல்களை கடற்படையின் உதவியுடன் மீட்டெடுக்க எதிர்பார்ப்பதாகவும், விபத்து தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருவதாகவும் அஜித் செனவிரத்ன இதனைக் குறிப்பிட்டார்.