January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மரக்கறி,பழங்களை கொள்வனவு செய்து மக்களுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானம்!

பயணக் கட்டுப்பாடு காரணமாக பெரும் இன்னல்களுக்கு முகங் கொடுத்துள்ள விவசாயிகளின் விளைச்சல்களை கொள்வனவு செய்து மக்களுக்கு இலவசமாக வழங்குகின்ற வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பிரதேசங்களில் பப்பாளி, வாழை, மரவள்ளி, மரக்கறி மற்றும் பழவகைகள் என்பவற்றை உற்பத்தி செய்திருந்தாலும், அவற்றை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு காணப்படும் சிரமத்தினை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, கொள்வனவு செய்யப்படும் பொருட்களை, பொதுமக்கள் உட்பட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுவரும் சுகாதார, பாதுகாப்பு பிரிவு ஊழியர்களுக்கு வழங்குமாறு விவசாயத்துறை அமைச்சருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களை நேற்று (02) சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி, விவசாயிகளிடம் இருந்து மரக்கறி மற்றும் பழங்களை கொள்வனவு செய்து விநியோகிக்கும் பொறிமுறையை உருவாக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.