January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை எதிர்கொண்டுள்ள கடல்சார் சுற்றாடல் அனர்த்தத்துக்கு எரிக் சொல்ஹைம் கவலை!

file photo: Facebook/ Erik Solheim

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து காரணமாக இலங்கையின் கடல்சார் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எரிக் சொல்ஹைம் கவலை வெளியிட்டுள்ளார்.

எரிக் சொல்ஹைம் உலக வளங்கள் நிறுவனத்தின் சுற்றாடல் பாதுபாப்பு வேலைத்திட்டங்களின் தலைமை ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார்.

இலங்கை மிக மோசமான கடல்சார் சுற்றாடல் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் எரிக் சொல்ஹைம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் கடற்பரப்பில் தீப்பிடித்த வணிக கப்பலில் இருந்த டொன் கணக்கான பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலந்து, சுற்றாடலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கை ஆச்சரியம் மிக்க கடற்கரைகளைக் கொண்ட அழகிய நாடு’ என்றும் எரிக் சொல்ஹைம் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, தெரிவித்துள்ளார்.

எரிக் சொல்ஹைம் இலங்கையின் யுத்த காலத்தில் சமாதானத் தூதுவராக செயற்பட்ட, நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.