இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் www.mahindarajapaksa.lk என்ற இணையத்தளம் நேற்று அடையாளம் தெரியாதோரால் ஹேக் செய்யப்பட்டதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சமூகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் இணையத்தளத்தை ஹேக் செய்து, பிட்கொய்ன் டிஜிட்டல் நாணயங்களுடன் தொடர்புடைய இணையத்தளம் ஒன்றுக்கு திசை திருப்பப்பட்டுள்ளது.
இணையத்தளத்தின் உள்ளடக்கங்களை தரவிறக்கம் செய்துகொள்வதற்காக இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சமூகத்தின் தலைவர் ராஜிவ் குருவிட்ட சுட்டிக்காட்டியுள்ளார்.
சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.