தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 947 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டுகளில் கடந்த 24 மணி நேரத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் மாத்தளையில் 193 பேரும், குளியாபிட்டியவில் 88 பேரும், நிக்கவரெட்டியவில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 21,087 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை 19 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.