இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு வெள்ளம் மற்றும் மண்சரி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.
இதனால் இந்த மாகாணங்களில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வடைவதால் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கொழும்பு, காலி, களுத்துறை மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நுவரெலியா, இரத்திபுரி, கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.