January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக பதவி வகித்த கே.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க அதிபராக இருந்த கலாமதி பத்மராஜா பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக தமிழ் மக்களின் வாழ்வியலாகக் காணப்படும் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையை வனவளத் திணைக்களம் உரிமை கோரிய விவகாரம் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

கலாமதி பத்மராஜா

தமிழ் மக்களுக்கு அங்கு செல்ல தடையை ஏற்படுத்திவிட்டு சிங்கள மக்கள் அந்த காணிகளில் துப்பரவு பணிகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிபராக இருந்த கலாமதி பத்மராஜா அந்த இடத்திற்கு சென்று ஆராய்ந்த நிலையில் அங்கிருந்த சிங்கள மக்கள் அரசாங்க அதிபருக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென அரசாங்க அதிபர் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.