January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 39 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 39 மரணங்கள் பதிவாகியுள்ளன.

மே 17 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மரணங்களில் 19 பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1566 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினத்தில் நாட்டில் மேலும் 3,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 191,809 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஒருவார காலமாக மூவாயிரத்திற்கும் குறைவான தொற்றாளர்களே நாளாந்தம் பதிவாகிய நிலையில் அந்த எண்ணிக்கை மீண்டும் நேற்று முதல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரையில் 160,714 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.