கொரோனா நோயாளர்களை சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு தேவையான பஸ்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொரோனா நோயாளர்களை சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு தனியார் போக்குவரத்து துறையினர் பஸ்களை எவ்விதத்திலும் வழங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.
கொரோனா நோயாளர்களை கொண்டு செல்லும் போது ஏற்படக்கூடிய எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்து வைப்பதற்கு சுகாதார அமைச்சின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா நோயாளிகளுக்கு போக்குவரத்து சேவையை வழங்குவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அது குறித்து கலந்தாலோசிக்க எந்நேரமும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் சுகாதார அமைச்சை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.