January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் 74 உழியர்களுக்கு திடீர் சுகயீனம்

கண்டி-பல்லேகல பகுதியில் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 74 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்லேகல முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த 74 ஊழியர்களும் வாந்தி மற்றும் தலைவலி காரணமாக மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகவீனமடைந்த 74 ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கும்  திடீர் சுகயீனத்திற்கும் எவ்வித  தொடர்பும் இல்லையென மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய உறுதிப்படுத்தியுள்ளார்.

உணவு விஷமானமையே இவர்களின் திடீர் சுகயீனத்திற்கு காரணம் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.