இலங்கையின் சுற்றாடலுக்கு எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பை 100 பில்லியன் ரூபா வழங்கினாலும் ஈடுசெய்ய முடியாது என்று சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கப்பல் மூழ்கும் போது ஏற்படும் எண்ணெய்க் கசிவைத் தடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், எண்ணெய்க் கசிவு பாரிய சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால், நிபுணர்களின் வழிகாட்டல்களுடன் அதனைப் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி வலியுறுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடற்பரப்பில் குறுகிய காலத்தினுள் இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றதால், தடுப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கு காரணமானவர்களின் தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகிந்த அமரவீர உறுதியளித்துள்ளார்.