January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் வரையறுக்கப்பட்ட சேவைகளுக்காக தபால் நிலையங்களை திறக்க முடிவு!

இலங்கையில் நாளை (03) முதல் தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

இம் மாதத்திற்கான பொது கொடுப்பனவு மற்றும் மருந்துகள் விநியோகம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட சேவைகளுக்காக தபால் நிலையங்கள் திறக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தபால் நிலையங்கள் மூலமாக கொடுப்பனவுகளை பெறுபவர்கள் கொடுப்பனவுடன் தொடர்புடைய அட்டைகள் மற்றும் அடையாள அட்டைகளை பயணக்கட்டுப்பாடுகளின் போது பொலிஸாருக்கு காண்பித்து தபால் நிலையங்களுக்கு செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி பணிக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய, அரச மருத்துவமனை கிளினிக்குகளிலிருந்து மருந்துகளை நோயாளிகளின் வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நாளை (03)முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தபால்மா அதிபர் கூறியுள்ளார்.

பொது மக்கள் தபால் சேவைகள் தொடர்பாக மேலதிக தகவல்களை  ‘1950’ என்ற எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.