July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையைப் பாதுகாக்க வந்தவர்கள் நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு செல்கின்றனர்’: பேராயர் மெல்கம் ரஞ்சித்

இலங்கையைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்ட வந்த குழுவினர், நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செய்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை எதை நோக்கிப் பயணிக்கிறது, யார் நாட்டை ஆட்சி செய்கின்றனர், யாரால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பன சிக்கல் மிக்கதாக மாறியுள்ளதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

‘நாட்டின் வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்வது அபிவிருத்தியல்ல’ என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நாட்டு வளங்களைவ விற்பனை செய்வது இலகுவான விடயமாக இருக்கும். எனினும், இந்த நாட்டுக்கென்று ஒரு கௌரவம் இருக்கின்றது.

நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பது அனைத்து அரசியல் தரப்பினரதும் பொறுப்பாகும்.

எம்சிசி ஒப்பந்தத்துக்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதற்கு தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.

ஆனால் இன்று, எம்சிசியைவிட அபாயமான ஒன்றை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் அனைத்தும் வீணாகி போயுள்ளது” என்றும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.