July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பெண்ணொருவர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்று (02) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 41 வயதான பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது;

தனது காணியில் இருக்கின்ற பனை மரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி வைத்து நெருப்பு பற்றவைத்த வேளையில் பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்துள்ளது. இதனையடுத்து குறித்த பெண் காயமடைந்துள்ளார்.காயமடைந்த பெண் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றனர்.