‘மரண அச்சுறுத்தல் விடுத்து தனக்கு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது’ என நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘அனைத்து சுகாதார பிரிவுகளுக்கு தெரியப்படுத்திய பிறகு தான் அபயராமய விகாரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
எனினும, எதுவும் தெரியாத ஒரு குழந்தையை போல சுகாதார அமைச்சர் தனது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தாலும், தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக அபயராமய விகாரையிலிருந்து தான் சுகாதார அமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது.
அத்துடன், அதிகம் சத்தம் போட்டால் உயிரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கடிதம் ஒன்று கிடைத்துள்ளது’என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியவர் முருந்தெட்டுவே ஆனந்த தேரர்.
எனினும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தெரிவித்து அண்மைக்காலமாக ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.