
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்களுக்கு சலுகைகளை வழங்குமாறு மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களை கவனத்தில் கொண்டு, மத்திய வங்கி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கான வழிகாட்டல்களையும் வெளியிட்டுள்ளது.
இந்த சலுகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகைமையுடைய கடன்பெறுநர்கள், 2021 ஜூன் 21 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தொடர்புடைய உரிமம்பெற்ற வங்கிக்கு எழுத்துமூலம் அல்லது இலத்திரனியல் வாயிலாக கோரிக்கையொன்றினை முன்வைக்குமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி கடன்பெறுநர்களுக்கு சலுகை வழங்கக்கோரி வங்கிகளுக்கு அனுப்பி வைத்துள்ள வழிகாட்டல்களைக் கீழே காணலாம்: