May 25, 2025 23:50:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படும்

இலங்கை முழுவதும் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டால் வருமானம் இழந்தவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு 65 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சமூர்த்தி பயனாளர்கள், ஏற்கனவே மாதாந்தம் அரசாங்கத்தின் கொடுப்பனவை பெறுபவர்கள், முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர், விசேட தேவையுடையோர், தினக் கூலி அடிப்படையில் தொழில் செய்வோர் ஆகியோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் பிரதேச செயலகங்களின் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கி வைக்கப்படவுள்ளது.