November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் மக்களின் செயற்பாடுகள் திருப்தியடையக் கூடிய வகையில் அமையவில்லை’

நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் மக்களின் செயற்பாடுகள் திருப்தியடையக்கூடிய வகையில் அமையவில்லை.எவ்வாறு இருப்பினும் குறித்த இரு வாரகால கட்டுப்பாட்டு காலத்தில் மக்களின் செயற்பாடுகளின் வெளிப்பாடு எவ்வாறானது என்பதை ஜூன் இரண்டாம் வாரமளவில் அறிந்துகொள்ள முடியும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் முறையாக வீடுகளுக்கு கொடுக்கப்படுகின்றது என்றால், அரசாங்கம் உரிய அதிகாரிகளை கொண்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்குமானால் நிச்சயமாக பயணத் தடை காலத்தின் பெறுபேறுகள் ஆரோக்கியமானதாக அமையும். அதனையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மக்களின் நாளாந்த வருமானம் இல்லாது போயுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும். எவ்வாறு இருப்பினும் நாட்டினை மீண்டும் திறக்க முன்னர் வைரஸ் பரவல் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.இல்லையேல் மீண்டும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் கூறினார்.