October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாய்ப்பிருந்தும் அரசாங்கம் தவறிழைத்துவிட்டது;பேராசிரியர் திஸ்ஸ விதாரண

கொவிட் -19 வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றம் பெற்று கட்டுப்பாட்டை மீறிய நிலையொன்றில் காணப்படுகின்ற போதிலும், இன்னமும் இதனை கொத்தணிகளுக்குள் முடக்கவே கொவிட் செயலணி முயற்சிக்கின்றது என இலங்கையின் சிரேஷ்ட வைரஸ் ஆய்வுகள் தொடர்பான நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைரஸ் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் இந்த நிலைமைகளை கையாள்வதில் பலவீனம் கண்டுள்ளார்,எனினும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நிலைமைகளை சரியாக விளங்கி கொண்டுள்ளார்.அதுமட்டுமல்ல, நான் வைரஸ் தொடர்பான நிபுணர் என்பது தெரிந்தும் என்னை இந்த வேலைத்திட்டங்களில் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என நினைக்கின்றேன்.

எவ்வாறு இருப்பினும் இவை விமர்சித்துக்கொண்டு இருக்கவேண்டிய காரணியல்ல, தொடர்ச்சியாக முடக்கமொன்று இருக்க வேண்டும், மக்களை முழுமையாக சுகாதார வழிமுறைகளின் கீழ் கொண்டுவர வேண்டும்.மக்களின் அனாவசிய செயற்பாடுகள் காரணமாக மீண்டும் வைரஸ் பரவல் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவலை எம்மால் இலகுவாக கட்டுப்படுத்த வாய்ப்புகள் இருந்தன.உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பத்தில் எமக்கு கொடுத்த 20 வீதமான தடுப்பூசிகளை அவசியமான நபர்களுக்கு கொடுத்திருந்தால், நிச்சயமாக இந்த பரவலை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.பரவலை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 70 வீதமான மக்களுக்கேனும் தடுப்பூசிகளை ஏற்றியிருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.