முன்னாள் போராளிகள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாரனான நாகலிங்கம் பிரதீபன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போரதீவு பிரதேசத்தில் வைத்து இன்று மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் கூறியுள்ளளனர்.
இவரை நாளைய தினத்தில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.