January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பிலுள்ள அரச காணிகளை சீனாவுக்கு வழங்கவுள்ளதாக போலிப் பிரசாரம்: அமைச்சர் கெஹெலிய

இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள பெறுமதியான கட்டடங்களையும் காணிகளையும் சீனாவுக்கு வழங்க அரசாங்கம் தயாராவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தி, சீனாவுக்கு வழங்கும் திட்டம் ஒன்று உள்ளதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே,  சீனாவுக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கும் பழைய கட்டடங்களை மீளமைத்து, நாட்டுக்கு பயனுள்ளதாக மாற்ற முயற்சிக்கும் போது, இவ்வாறான போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகளை சீனாவுடன் தொடர்புபடுத்தி, ஊடகங்கள் விமர்சிப்பதாகவும் அமைச்சர் கெஹெலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

சேதமடைந்துள்ள கட்டடங்கள் பலவற்றை நகர அபிவிருத்தி நிறுவனம் மீளமைத்து, வருமானம் ஈட்டும் இடங்களாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நல்ல முயற்சிகள் இவ்வாறு விமர்சிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் தலைமையகம் உட்பட பல்வேறு கட்டடங்களும் கொழும்பில் இருந்து வெளி இடங்களுக்கு இடமாற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.