January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலுக்குள் மீட்புப் பணியாளர்கள் மதிப்பாய்வுகளை ஆரம்பித்தனர்

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர், மீட்புப் பணியாளர்கள் மதிப்பாய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் ஒரு வாரத்தின் பின்னர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கப்பலில் எண்ணைய்க் கசிவு முழுமையாக மறைந்து, தீச்சுவாலைகள் மறைந்ததைத் தொடர்ந்து, இன்று காலை முதல் குளிரூட்டும் பணிகள் நடைபெற்றன.

இலங்கை- இந்திய கடற்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கப்பல் குளிரூட்டப்பட்ட பின்னர், மீட்புப் பணியாளர்கள் கப்பலுக்குள் நுழைந்து, மதிப்பாய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.