சீனா தாம் உற்பத்தி செய்யும் சினோபார்ம் தடுப்பூசிகளை எந்தவொரு நாட்டிற்கும் விற்பனை செய்யும் போது அதன் விலையை சீனாவே தீர்மானிக்க முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அத்தோடு தடுப்பூசியின் விலை குறித்து இலங்கை அரசு முடிவு செய்யவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ முடியாது என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள சீன தூதரகம் அல்லது சீன அரசு மட்டுமே கருத்து தெரிவிக்க முடியும் என்று அவர் கூறினார்.
சினோபார்ம் தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு விற்பனை செய்ததைவிடவும் குறைந்த விலையிலேயே இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சினோபார்ம் தடுப்பூசிகளை சீனா பங்களாதேஷு க்கு விற்பனை செய்ததை விடவும் அதிக விலைக்கு இலங்கைக்கு விற்பனை செய்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இரு தினங்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
எனினும் இலங்கைக்கான சீன தூதரகம் இதனை மறுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (01) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அரச தரப்பு இதனை தெரிவித்துள்ளது.