பொலிஸ் தலைமையகத்தை கொழும்பு கோட்டையில் இருந்து இடமாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து பெலிலியானவுக்கு மாற்றுவதற்கு கொள்கைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தை மிரிஹானவுக்கு மாற்றுவதற்கு 2012 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தை பெபிலியானவுக்கு மாற்றுவதற்கான யோசனையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார்.
அதனடிப்படையில், பொலிஸ் தலைமையகத்தை கொழும்புக்கு வெளியே இடமாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.