January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். நூலகத்திற்கு முன்னால் கண்காணிப்பு நடவடிக்கையில் பொலிஸார்!

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், அதனையொட்டி நினைவு நாள் நிகழ்வுகள் நடத்தப்படலாம் என்பதானால் நூலகத்திற்கு முன்னால் பொலிஸ் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ். மாநகரசபையினரின் ஏற்பாட்டில் இன்று காலை பொது நூலக வளாகத்தில் நினைவு நாள் நிகழ்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.

எவருக்கும் நூலக வளாகத்திற்குள் செல்ல முடியாதவாறு அதன் பிரதான நுழைவாயில் பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நூலகத்திற்கு செல்லும் வீதியிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.