July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு குறைந்தபட்ச ஊழியர்களை மட்டும் சேவைக்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்  இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

நாட்டிற்குள் கொவிட் -19 வைரஸ் தொற்று பரவுவதைக் குறைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காரணம் இன்றி அத்தியாவசிய சேவைகளுக்கான கடிதங்களை வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்று (31) காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையான காலப்பகுதிக்குள் மேல் மாகாணத்திற்கு 55,944 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அத்தியாவசிய தேவைகள் எதுவுமின்றி 3,528 வாகனங்கள் மேல் மாகாணத்திற்குள் பிரவேசித்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.