
பயணக் கட்டுப்பாடுகளின் போது மக்களிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
புத்தளம் நுரைச்சோலை பகுதியில் பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்த ஒருவரிடம் 2000 ரூபாவை இவர்கள் இலஞ்சமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உயர் அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் குறிப்பாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் இலஞ்சம் கோருவது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.