January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்ததின நிகழ்வு; ஷங்ரில்லா ஹோட்டல் நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டல் நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் பிறந்ததின நிகழ்வொன்றை நடத்த அனுமதி வழங்கிய குற்றச்சாட்டிலேயே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த பிறந்ததின நிகழ்வை ஏற்பாடு செய்த அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியுமி ஹன்சமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் 25 பேரளவில் கலந்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தீவிரமடைந்ததோடு நாட்டில் மக்கள் ஒன்றுகூடும் அனைத்து நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிறந்ததின நிகழ்வொன்றை ஏற்பாடு செய்ய இடம் வழங்கியதாக ஷங்ரில்லா ஹோட்டல் நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.