
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் சிகிச்சை நிலையங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட மருத்துவ நிபுணர் ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார கல்வி பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த வாரம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை நிலையப் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவின் 60 கட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இவ்வாரம் 73 வரை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதுவரையில் 149 சிகிச்சை நிலையங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அவை 168 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.