
கொழும்பு போர்ட் சிட்டி ஒரு நாட்டுடன் மாத்திரமான திட்டமல்ல என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
போர்ட் சிட்டி ஒரு தேவதையா அல்லது பேயா? என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர்ட் சிட்டியில் அனைத்து நாடுகளும் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் அதற்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதளவில் பல மேற்கு நாடுகளின் பெரும் நிறுவனங்களும் போர்ட் சிட்டியில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஐரோப்பாவின் முன்னணி மருத்துவமனைகள், பாடசாலைகளின் வருகையையும் போர்ட் சிட்டியில் கண்டுகொள்ளலாம்.
எனவே, இது ஒரு நாட்டுடன் இணைந்த திட்டம் அல்ல. பொருளாதாரத்தை மையப்படுத்தி, அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் முதலீட்டுத் திட்டமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.