
விமான நிலையத்தை மூடுவதற்கான தீர்மானத்தை நீட்டிக்கலாமா, அல்லது தளர்த்தலாமா என்பது குறித்த இறுதி முடிவை தேசிய கொவிட் தடுப்புச் செயலணி இன்று (31) அறிவிக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கைக்கான அனைத்து பயணிகள் விமானங்களையும் கடந்த மே 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் 14 நாட்கள் நிறுத்தி வைக்க சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்திருந்தது.
இருப்பினும், இலங்கையிலிருந்து பயணிக்கும் பயணிகள் விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த்து.குறிப்பிடத்தக்கது.