January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் கூழாவடிப் பகுதியில் இன்று (30) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.

வீதியால் சென்ற ரக்ரர் மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்,இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் காயமடைந்த அனைவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை காயம் அடைந்தோரில் வயது முதிர்ந்த பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.