இலங்கையில் இன்று (30) மேலும் 2,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 183,442 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,434 பேர் இன்று (30) குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 149,825 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான 32,212 பேர் நாட்டின் பல கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அத்தோடு இலங்கையில் இன்று (30) மேலும் 36 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1441 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனிடையே நாட்டில் இன்று (30) வெளியிடப்பட்ட அறிக்கைகளின் படி, 1541734 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் 1வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன், 346240 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் 1வது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.