January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கப்பல் பாதுகாப்புப் பிரிவின் ஒரு தொகை ஆயுதங்கள் காலி கடலில் விழுந்து காணாமல் போயுள்ளன!

கப்பல் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுதங்கள் சில காலி கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் இருந்து ஸ்பெயின் நோக்கி சென்ற சரக்கு கப்பலுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கும் போது, அவை கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக ஆயுத களஞ்சியத்தில் இருந்து ஆயுதங்களை கப்பலுக்கு கொண்டு சென்றவர்களினால் காலி துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலியில் உள்ள குறித்த கப்பல் பாதுகாப்பு நிறுவனத்தின் களஞ்சியத்தில் இருந்து ஆயுதங்களை படகொன்றில் எடுத்து சென்று கப்பலில் இருந்த பாரம் தூக்கியின் உதவியுடன் அவற்றை கப்பலுக்கு ஏற்ற முயற்சித்த போது, திடீரென ஏற்பட்ட பாரிய அலையால் பாரம் தூக்கியின் பகுதியொன்று கப்பலில் மோதியதால் அந்த ஆயுதங்கள் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து அந்த இடத்தில் கடற்படையினர் தேடுதல் நடத்திய போதும், காணாமல் போனதாக கூறப்பட்ட ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக காலி துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.