கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று மாத்தறைக்கு சென்றிருந்தார்.
மாத்தறை வெல்லமடம மகிந்த ராஜபக்ஷ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு சென்ற பிரதமர், அங்கு தடுப்பூசி வழங்கும் செயன்முறை குறித்து பார்வையிட்டார்.
இதன்போது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்தத் திட்டத்தை செயற்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
அரச அதிகாரிகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் துப்புரவுத் தொழிலாளர்கள், சுகாதார சேவை அல்லாத அத்தியவசிய சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அங்கு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டனர்.
இந்த கண்காணிப்பு பயணத்தில் பிரதமருடன் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான நிபுன ரணவக, கருணாதாச கொடிதுவக்கு, வீரசுமன வீரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.