மன்னாரில் விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமரா பயன்படுத்தி பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணித்துள்ள போது கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் இன்று (30) மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் மைதானங்களில் இளைஞர்கள் கூடி விளையாடியமை, வீதிகளில் கூடி நின்றமை ஆகியவை ட்ரோன் கமராவின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு மன்னார் பொலிஸாரினால் அதிரடியாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வாக்கு மூலம் பெறுவதற்காக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமரா மூலம் மன்னார் பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டம் கண்காணிக்கும் நடவடிக்கை தொடரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாட்டை மீறி அனுமதி இன்றி வெளியில் பயணிப்போர் மற்றும் வீதிகளில் அநாவசியமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் எனவும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.