January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வைத்தியசாலைகளில் தாதிமார் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு தீர்மானம்

File Photo: Facebook/ All Ceylon Nurses union

அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதிமார்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதன்படி நாளைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. மெதிவத்த தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் தாதிமார் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் முறையான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாகவும், இதனாலேயே தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் மெதிவத்த குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானத்திற்கமைய நாளை காலை முதல் ஜுன் முதலாம் திகதி காலை வரையில் பணிகளில் இருந்து தமது சங்கத்தின் உறுப்பினர்கள் விலகியிருப்பார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.