January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித தேரர் கொவிட் தொற்றால் காலமானார்

காலி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித தேரர் காலமானார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் மாத்தறை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று இரவு தனது 69 ஆவது வயதில் காலமானதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

2001 பொதுத் தேர்தலில் பத்தேகம சமித தேரர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு 42,120 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதன்மூலம் இலங்கை வரலாற்றில் முதலாவதாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய பௌத்த தேரர் என்ற பெருமையை பத்தேகம சமித தேரர் பெற்றிருந்தார்.