January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தடுப்பூசிகளை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டாம்’; அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் வலியுறுத்தல்!

Vaccinating Common Image

கொரோனா தடுப்பூசிகளை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் இவ்வாறு பெற்று கொள்வது ஆபத்தானது எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் இதுவரை எந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கும் கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்வதற்கு  அனுமதி அளிக்கப்படவில்லை.

அவ்வாறு தடுப்பூசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கும்படியும் அதன் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன கேட்டு கொண்டுள்ளார்.

அரசாங்கம் தடுப்பூசியை இலவசமாக வழங்கி வரும் நிலையில், அதனை நாட்டில் எவருக்கும் விற்பனை செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு வழங்குபவர்களுக்கு எதிராக கொரோனா தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஓரிரு மாதங்களில் நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் பதற்றம் அடைந்து உறுதிப்படுத்தப்படாத தடுப்பூசிகளை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன வலியுறுத்தியுள்ளார்.