கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விசேட தேவை உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இன்று (மே 29) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக அதிக பாதிக்கக் கூடியவர்களாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் விசேட தேவை உள்ளவர்கள் தடுப்பூசி பட்டியல்களில் சேர்க்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நாட்டின் ஏனைய பிரஜைகளை போலவே சம உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறானவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.