July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயண கட்டுப்பாடுகளின் போது அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கான எச்சரிக்கை!

Photo: Facebook/Consumer Affairs Authority

இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இவ்வாறு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களின் பயண கட்டுப்பாடுகளின் போது பொருட்களை விற்பனை செய்ய வழங்கப்படும் விசேட உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தோடு, இவ்வாறு ரத்து செய்யப்பட்ட உரிமங்களை அப்பகுதியில் உள்ள மற்றொரு விற்பனையாளருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில், நுகர்வோர் விவகார ஆணையத்தின் ‘1977’ என்ற எண்ணுக்கு அறிவிக்க முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பயண கட்டுப்பாடுகளின் போது, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் இரண்டு வர்த்தகர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.