இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன், இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த இரண்டு மாகாணங்களிலும் தடுப்பூசி வழங்கும் செயன்முறை மந்தமாக இருப்பதாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் எஸ். பாலசந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்தியா தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கியிருந்தாலும், வடக்கு- கிழக்கு மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் போதிய அளவில் கிடைக்கப் பெறவில்லை என்று விக்னேஸ்வரன் எம்.பி. இந்திய பிரதி உயர் ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்தியா அவசர கோரிக்கையாகக் கருத வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.