July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி!

(Photo : Facebook /Kapila Athukorala)

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் 3 வது அலையின் போது தொற்றுக்குள்ளான 5 வது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் ஆவார்.

கபில அத்துகோரலவுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று(29) வெளியாகியதையடுத்து இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இவர் தற்போது, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.