November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜூன் 07 க்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது ,தளர்த்துவது சம்பந்தமாக எந்த தீர்மானமும் எடுக்கவில்லை’

ஜூன் 07 ஆம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது சம்பந்தமாகவோ அல்லது தளர்த்துவது சம்பந்தமாகவோ  இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

ஜூன் 07 ஆம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை தொடர்வது அல்லது தளர்த்துவது பற்றி, நடைமுறையில் உள்ள நிலைமை, எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்று தொடர்பில் கணிக்கப்படும் கணிப்புகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும் என்றும் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் பதிவான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையில் சரிவு இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்,பயணத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டின் தாக்கத்தை இன்னும் 14 நாட்களின் பின்னர் உணர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளின் வீதம் அதிகரிக்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத், தற்போது தினமும் 18,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படுகின்றன.இது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.