
யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் கொவிட் தடுப்பு வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கமைய அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டம் மேல் மாகாணத்தில் கடந்த மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்தக் கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதனை முன்னெடுக்கவுள்ளதாக இராணுவத் தளபதி இன்று அறிவித்துள்ளார்.