
இலங்கை முழுவதும் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 7 ஆம் திகதி வரை தொடர தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால் முன்னர் அறிவித்ததை போன்று மே 31 மற்றும் ஜுன் 4 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்பு தேசிய செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நடமாடும் வாகனங்களின் ஊடாக விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.